இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பயணத்தை ரத்து செய்த பிரதமர்!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவிற்கு…

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவிற்கு வரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,50,61,919 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,73,810 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 25ம் தேதி இந்தியாவுக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வர இருந்த போரிஸ் கொரோனா தொற்று பாதிப்பால் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

ஏப்ரல் 25ல் வரும் போரிஸ் நான்கு நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது ரத்தாகியுள்ளதால், இந்தியா மற்றும் பிரிட்டன் இணைந்து மெற்கொள்ளவிருக்கும் தொழில் உடன்பாடுகள் மெய்நிகர் வழியில் நடத்தப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,78,769 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.