இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் தலைவர் முதலிடம்!

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் பெண்கள் உயர் பதவியில் இருக்கின்றனர். அந்தவகையில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவராக ரோஷினி நாடார்…

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் பெண்கள் உயர் பதவியில் இருக்கின்றனர். அந்தவகையில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவராக ரோஷினி நாடார் சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில் இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ரோஷினி நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.54,850 என கணக்கிடப்பட்டுள்ளது.

கொடாக் வெல்த் மற்றும் ஹூரன் இந்தியா இணைந்து தயாரித்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 100 பெண்களின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.2.73 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ரோஷினி நாடாரை தொடர்ந்து ரூ.36,600 சொத்து மதிப்புடன் Biocon தலைவர் கிரண் மசும்தார் ஷா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ரூ.21,340 கோடி சொத்து மதிப்புடன் USV தலைவர் லீனா காந்தி தெவாரி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply