பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் J. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியா-இங்கிலாந்து இடைய பயணிகள் விமான…

இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் J. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியா-இங்கிலாந்து இடைய பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பிற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வருவோருக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முறைகளை, சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்த கொரோனா வைரஸ், மரபணு மாற்றம் அடைந்ததா? என்பதைக் கண்டறிய, தொற்று பாதித்தவரின் சளி மாதிரியை புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசால், தமிழக மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றார். தமிழகத்தில் Track and Trace முறையில் தீவிரமாக கண்காணிப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply