அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி மார்க்சிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்!

தீர்த்தங்களை திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களாக பக்தர்கள் நீராட கோயில்…

தீர்த்தங்களை திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களாக பக்தர்கள் நீராட கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் நீராட அனுமதிக்க வேண்டும் என்றும், கோயிலின் மேலரத வீதியில் உள்ள கடைகளை திறக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply