ஐ-போன் திருடன் கைது!

மதுரையில் செல்போன் கடையில் 35 ஐபோன்களை திருடிக்கொண்டு தலைமறைவான கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மதுரை அண்ணாநகர் 80 அடி சாலை பகுதியில் பிரபல செல்போன் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த நிறுவனத்தில்…

மதுரையில் செல்போன் கடையில் 35 ஐபோன்களை திருடிக்கொண்டு தலைமறைவான கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர் 80 அடி சாலை பகுதியில் பிரபல செல்போன் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் கடையில் இருந்த சுமார் 35 செல்போன்களை கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருடிக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

இந்த நிலையில் கடையின் மேலாளர் ராஜ்குமார் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை தேடி வந்த நிலையில் மதுரையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த மனோஜ் குமாரை மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 35 ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சுமார் 6 மாத காலமாக காவல்துறை ஏமாற்றி வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்த அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் துறையினரை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply