ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் : இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்விஷா 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். புஜாராவுடன் இணைந்த மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புஜாரவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, நிதான ஆட்டத்தை வெளி்பபடுத்தினார். புஜாரா 160 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஆவுட் ஆகினார்.

ரகானேவுடனும் நிதானமாக விளையாடிய விராட்கோலி 123 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விராட் கோலி 74 ரன்கள் எடுத்து போது, ரன்அவுட் முறையில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி முதல்நாள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply