ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.
அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவது போலவும், ஆன்லைன் விளையாட்டால் பணம் சம்பாதிக்கலாம் என கூறும் வகையிலும் விளம்பரம் அமையக்கூடாது.
மேலும் ஆன்லைன் விளையாட்டு குறித்த விளம்பரத்தில், ‘இதில் நிதி ஆபத்து உள்ளது’, ‘அடிமைத்தனம் ஏற்படலாம்’, உங்கள் சுய விருப்பத்துடன் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் விளையாடுங்கள் என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கியிருக்க வேண்டும். இதையே குரல் பதிவாகவும் வெளியிட வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டால் பணம் சம்பாதிக்கலாம் என சித்தரிக்க கூடாது, இதை ஒரு வருமான வாய்ப்பாகவோ, அல்லது துணை வருமானமாகவோ கருதும் வகையில் சித்தரிக்க கூடாது.
முக்கியமாக ஆன்லைன் விளையாட்டின் ஈடுபடுபவர்கள் பிறரைக் காட்டிலும் வெற்றியாளர்கள் என பரிந்துரைக்கும் வகையிலும் ஆன்லைன் விளம்பரங்கள் இருக்க கூடாது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமானது, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து தனியார் சாட்டிலைட் சானல்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.







