அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த தனது அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐஐடி உலக மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஒருபோதும் நடக்காது என்று தாங்கள் நினைத்த பல விஷயங்கள், மிகப் பெரிய வேகத்தில் நடப்பதாகவும் அவர் கூறினார்.
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் எனும் அடிப்படைக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தம் நிகழ்வது உறுதிப்படுத்தப்படும் என்றார். கொரோனா தொற்றுக்கு பிறகு, சர்வதேச அளவில் சிந்தனைப் போக்கு என்பது, மறு கற்றல், மறு சிந்தனை, மறு புதுமை என்பதாக மாறி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.







