2018ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் கணினி பழுதானதால் செல்போன் உதவியுடன் தேர்வு எழுதியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், விரைவில் பணி நியமன ஆணை வழங்கக்கோரி தேர்ச்சி பெற்றவர்கள் கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஓரிரு நாளில் முதலமைச்சரிடம் கலந்து பேசி பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.







