அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து B-TEAM என்பதா, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறத்தின் பக்கம் நிற்பவரைப் பார்த்து பாஜகவின் B-TEAM என்கிறவர்களின் நோக்கம், ஊழலைப் போற்றுவது என தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டியவர்கள், தங்களுக்கு ஆபத்து வருகையில், ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை என தெரிவித்துள்ள கமல்ஹாசன், இவர்கள், திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா, என கேள்வி எழுப்பி உள்ளார்.
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்கு தான், தாம் B-TEAM என தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஆறு வயதிலிருந்தே, தான் A-TEAM என்பதை, A1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.







