செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் இலவச இறகு பந்து போட்டிக்கான பயிற்சியை தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளியினர் துவங்கி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் விளையாட்டில் ஆர்வமுடைய 32 மாணவர்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக அவர்களுக்கு இலவச இறகு பந்து பயிற்சியை தனியார் அறக்கட்டளையினருடன் இணைந்து பள்ளியினர் துவங்கி உள்ளனர்.
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையினர், படூர் ஊராட்சி மற்றும் விங்க்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பினர் இணைந்து இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இதனை திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார்.
மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வைப்பதே தங்கள் லட்சியம் என தெரிவித்துள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர்,அறக்கட்டளையினர் நிறுவனர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேந்தன்







