அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு சார்பில் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இதில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இந்நிலையில் அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் 510 மதிப்பெண்ணுக்கு கீழே பெற்ற யாருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அரசு கொண்டு வந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் 147 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்றும் விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply