புதிய வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்! – சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை

புதிய வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என, சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடியில், மனித உரிமை தினத்தையொட்டி, சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக, கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது. வஉசி…

புதிய வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என, சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில், மனித உரிமை தினத்தையொட்டி, சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக, கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது. வஉசி கல்லூரி அருகில் துவங்கிய பேரணியை, அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தனியார் பள்ளியில், ரத்த தான முகாம் கண்தான முகாம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ்கண்ணன், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், என கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் தற்போது மனித உரிமை மீறல் என்பது, வெகுவாக குறைந்துள்ளது என்றும், அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply