திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி, தன்னிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரை எதிர்த்து நத்தபாளையத்தில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே நத்தப்பாளையத்தில் அதிமுக முன்னாள் ஒன்றிய
செயலாளர் வி.பி.பெரியசாமியின் மகன் சின்ன வி.பி.பெரியசாமி, மூலனூரில் குகன் பீட்ஸ் என்ற பெயரில் கோழி தீவன தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது தொழில்ரீதியாக திருப்பூர் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (49), என்பவரிடம் ரூ.1.10 கோடி கடனாக வாங்கியிருந்தார்.
நான்கு ஆண்டுகள் கடந்தும் பணத்தை திருப்பி வழங்காததால் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன், மூலனூர் வி.பி.பெரியசாமியின் வீட்டின் முன்பு தந்தை துரைசாமி, மனைவி சித்ரா, மகன்கள் தினேஷ், லோகேஷ், ஆகியோருடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
—ம. ஶ்ரீ மரகதம்







