வாடிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவை பதில் அளித்த Zomato! இணையத்தில் வைரல்!

Zomato அதன் வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது  இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக  விளையடுவது வழக்கம்.  அண்மையில், …

Zomato அதன் வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக  விளையடுவது வழக்கம்.  அண்மையில்,  மீன் பொரியல் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கும்,  Zomato வாடிக்கையாளர் சேவைக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : கருவின் வயதை கண்டறிய ‘கர்ப்பிணி-ஜிஏ2’ மாதிரி உருவாக்கம்! – சென்னை ஐஐடி சாதனை!

இது ஒரு வகையான விளையாட்டு,  இதில் தவறாக பதில் சொல்லும் நபர் வெளியேற்றப்படுகிறார்.  இந்த விளையாடு தொடர்பாக பலர் தங்களது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவை உருவாக்கியுள்ளனர்.  Zomato வின் வாடிக்கையாளரான ரித்திகா என்ற பெண்,  “நான் எனது ஆர்டரை தவறான முகவரிக்கு அனுப்பியுள்ளேன்,  தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று கேட்டுள்ளார்.

“ஆர்டர் விவரங்களை என்னிடம் சொல்ல முடியுமா?” என்று ஜொமேட்டோ கேள்வி கேட்டுள்ளது.  இதற்கு “ஒரு மீன் வறுவல்” என்று ரித்திகா பதிலளித்துள்ளார்.  ஜொமேட்டோ  நிறுவனம் ‘தண்ணீரில் சென்றது’ என நகைச்சுவை பதிலளித்தது தற்போது  சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.