சொமேட்டோ நிறுவனம் பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய ஆர்டர்களை வழங்கும் வகையில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
உணவு விநியோகிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, சைவ உணவு பிரியர்களை கவரும் வகையில் சைவ உணவுகளை ஆர்டர் செய்பவர்களுக்கு, சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் உணவுப் பைகளை பயன்படுத்த முடிவு செய்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த தனித்துவ ஊழியர்கள் வழக்கமான சிகப்பு நிறத்திலான ஆடை மற்றும் பைக்கு பதிலாக, பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் பையை பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சில நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், பலரும் தாங்கள் சொமேட்டோ ஆப்பை தங்கள் கைப்பேசியில் இருந்து நீக்கி அதனை ஸ்க்ரீன்ஷாட் செய்து சமூகவலை தளங்களில் பகிரத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, சொமேட்டோ நிறுவனம் இச்சேவையை திரும்பப் பெருவதாக அறிவித்தது.
இந்த நிலையில், சொமேட்டா நிறுவனம் பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய ஆர்டர்களை வழங்கும் வகையில் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதனை சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீந்தர் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







