திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கம்!

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி…

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்.

இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.