சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ஆம் தேதி தேனியில் போலீசார் கைது…

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ஆம் தேதி தேனியில் போலீசார் கைது செய்தனர். கைதின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கஞ்சா வழக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.