ஜூலை 29, 2022 முதல், YouTube-ல் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை மறைக்க முடியாது எனத் தகவால் வெளியாகியுள்ளது.
YouTube சமீப காலமாக அதீத வளர்ச்சியை எட்டியுள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை என அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு தளங்களை YouTube வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்படும் சேவையில், பல்வேறு வசதிகளையும் YouTube வழங்கி வந்தது. அதில் ஒரு வசதிதான் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை விருப்பத்தின் அடிப்படையில் காண்பிக்கச் செய்வது அல்லது அதனை மறைத்து வைப்பது.
இந்த சேவை, ஜூலை 29 முதல் நிறுத்தப்பட உள்ளதாக YouTube தெரிவித்துள்ளது. அதன்படி, சேனல்கள் இனி YouTubeல் தங்கள் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை மறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதனால், எல்லா சேனல்களின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையையும் காண்பிப்பது மற்றவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதைக் கடினமாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘கத்தியைக் காட்டி 3 பேரைக் கடத்திய மர்ம கும்பல்’
மேலும், YouTube இல் ஆள்மாறாட்டம் செய்வதைச் சமாளிக்க என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியும் விரிவாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, சில முக்கிய சேனல்களை போல, போலியான சேனல்களை உருவாக்கி மக்களை ஈர்ப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக YouTube தெரிவித்துள்ளது.
மேலும், சில கிரியேட்டர்கள் தங்கள் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை அவர்கள் வளர முயற்சிக்கும்போது மறைக்க விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம் எனத் தெரிவித்துள்ள YouTube, உங்கள் ரசிகர் பட்டாளத்தை எப்படி அதிகரிப்பதற்கு நாங்கள் உதவுகிறோம் எனக் கூறியுள்ளது. YouTube-ன் இந்த அதிரடி அறிவிப்பு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது என்றாலும், சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையைக் காட்ட விரும்பாதவர்களுக்குக் கவலையைக் கொடுக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








