பெருங்களத்தூரில் மது போதையில் முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் 2 மணிநேரத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.
தாம்பரம் மாந்தோப்பை சேர்ந்தவர் இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப பிரச்னை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது
அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் டேனியல் தற்கொலை எண்ணத்துடன் முதல் மாடியில் இருந்து
குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அப்பகுதியில் சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் மூலம் உடனடியாக மின்சாரமும் நிறுத்தப்பட்டது.
இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள்
டேனியலை மீட்டு அந்த வானத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிர்காக்க
முயன்றனர். ஆனால் டேனியல் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து 2 மணி நேரம் கழித்து வாகனம் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.







