சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது

சென்னை அண்ணாநகரில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவியை…

சென்னை அண்ணாநகரில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவியை கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் K – 4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில், 17 வயது சிறுமியிடம் மதுரையை சேர்ந்த உசேன் (வயது 21) என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது சொந்த ஊரான மதுரைக்கு உசேன் அழைத்துச் சென்றுள்ளதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் மதுரைக்கு சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு இருந்த உசேனை கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், உசேன் ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு அண்ணா்நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் உசேன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.