ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படம் என்றால் அது ஜவான் தான். படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோவில் ஷாருக்கான் இதுவரை பார்க்காத அளவிற்கு அதிரடி ஹீரோவாக தோற்றமளிக்கிறார். இதுவே இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
ஜவான் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் 84 கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு இருக்கிறது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் 134 கோடியாகும். அதேபோன்று இசை உரிமம் 36 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.
Readyyyyyy pic.twitter.com/SkGLDAWJ8R
— atlee (@Atlee_dir) July 23, 2023
மேலும், கோலிவுட்டில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி, ஜவான் படத்தி வில்லனாக பாலிவுட்டில் ஓர் கலக்கு கலக்க இருக்கிறார். ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்து இருப்பேன். ஏன் என்றால் நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் இன்ட்ரோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் கண் மட்டும் இந்த போஸ்டரில் தெரிகிறது. ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவருக்காக தனியாக டீசர் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







