விருதுநகர்- மதுரை சாலையில் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாகம் 77-வது பொருட்காட்சியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பொருட்காட்சி நடைபெற்றது.
அப்போது ராட்டினத்தில் இருந்து கௌசல்யா(22) என்ற பெண் தவறி கீழே விழுந்து காலில் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்பட்ட ராட்டினத்தில் ஹைட்ராலிக் பூட்டு இருந்தும், காலை சரியாக பூட்டாததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.







