முக்கியச் செய்திகள் சினிமா

இளைஞர்கள், திரைப்படத்திற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டாம் -ஆர்.ஜே.பாலாஜி

இளைஞர்கள், அதிக நேரத்தை ஒரு திரைப்படத்திற்காக செலவிட வேண்டாம் என நடிகர் ஆர் ஜே பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

ரன் பேபி ரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள
தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி,
விவேக் பிரசன்னா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார்
உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது மேடையில் பேசிய நடிகர் ஆர்.ஜே பாலாஜி,  என்னுடைய போன படம் வீட்ல விசேஷம் ரிலீஸ் ஆகி ஆறு மாதம் ஆகிறது அதன் பிறகு இப்பொழுது தான் அனைவரையும் சந்திக்கிறேன் அனைவருக்கும் புத்தாண்டு குடியரசு தின வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.


மேலும், நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை எனக்கு தெரிந்ததை வைத்து மூன்று படங்கள் எடுத்தேன். சர்தார் படம் போல ரன் பேபி ரன் வெற்றி படமாக அமையும், இதுவரை தொடர்ந்து 3 படங்களை நானே இயக்கி நடித்தேன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் நல்ல இயக்குனர்கள் கதையில் நடிக்க விரும்பினேன் அப்படி அமைந்தது தான் இந்த படம். இயக்குனர் சிரித்தபடியே எல்லா வேலைகளையும் வாங்கி விட்டார் என கூறினார்.

அத்துடன், எனக்கு ஒரு பாலிசி உள்ளது நான் நடிக்கும் படத்தில் எனக்கு மேக் அப்,
காஸ்ட்யூம் பணிக்காக வருபவர்களின் வருமானத்தை நானே கொடுக்க முடிவு
செய்துள்ளேன் என்றார்.

மேலும், ஒரு படம் நம் நாட்டில் எவ்வளவு கலெக்ஷன் செய்தது, வெளிநாடுகளில் எவ்வளவு
கலெக்ஷன் செய்தது, யூடியூபில் எவ்வளவு பேர் அந்த படத்தின் டிரைலரை பார்த்து
உள்ளார்கள் இன்று இளைஞர்கள் நிறைய நேரத்தை ஒரு திரைப்படத்திற்காக
செலவிடுகிறார்கள். கோடி கோடியாக சம்பளம் பெற்று நடிக்கும் நடிகர்கள் , இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர்கள் இது குறித்து கவலைப்படுவார்கள் இளைஞர்கள் நிறைய நேரத்தை திரைப்படங்களுக்காக முதலீடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறினார்.
அத்துடன், சமீபத்தில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் ஒரே நாளில் பத்தாயிரம் பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் 10 பேர் செய்யக்கூடிய வேலைகளுக்காக ரோபோவை பணியமத்தி விடுகிறார்கள் வரும் காலகட்டங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். சில நாட்களுக்கு முன்பு ஒரு உயிரே போய் இருக்கிறது இதெல்லாம் தேவையில்லை என கூறினார்.

படத்தின் கலெக்ஷன் பற்றி எல்லாம் நாங்கள் பாத்துக்கிறோம் அந்த டென்ஷன்
உங்களுக்கு தேவையில்லை. படம் தியேட்டரில் வரும்போது நல்லா இருக்கிறதா நல்லா இல்லையா என்று சொல்லுங்கள் திருத்தி கொள்கிறோம். Youtube சேனலுக்கு வேண்டுகோள் இளைஞர்களை கொம்பு சீவுவது போன்ற கண்டன்டுகளை (content) கொடுக்காதீர்கள் என கூறினார்.

அத்துடன், கதை தான் என்னுடைய ஹீரோ என்று நான் நினைக்கிறேன். விஜய்க்கான கதை என்ன ஆனது என்ற கேள்விக்கு? விஜய்க்கு நான் சொன்ன கதை அதே கட்டத்தில் தான் உள்ளது, என்னை பொறுத்தவரை விஜய் போல மிகப்பெரிய நடிகருக்கு நான் படம் செய்ய அதை எழுத ஒரு வருடமாவது எனக்கு தேவை என அவரிடமே கூறினேன் எனவே நானும் அடுத்தது படத்தில் நடிக்க தொடங்கி விட்டேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு உடல்நலக் குறைவு

Web Editor

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

EZHILARASAN D

ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்

EZHILARASAN D