இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராமன். தனியார் நிறுவனம் ஒன்றில்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராமன். தனியார் நிறுவனம் ஒன்றில் தமது காருக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். கார் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த நிலையில், தங்கராமனும் அவரது உறவினர்களும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர் இன்சூரன்ஸ் தொகை கோரி பதிவு செய்திருந்தார். ஆனால், ஐந்து மாதமாகியும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக வேலையின்றி தவித்த தங்கராமன் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் தங்கராமனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் தங்கராமன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.