பிக் பாஸ் 7: ”நீங்க லவ்வர்ஸ் தானே…சந்தேகமா இருக்கு…” – விசித்ராவிடம் உண்மையை சொன்ன மணி – ரவீனா!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான ரவீனா தாஹா மற்றும் மணி சந்திராவிடம் அவர்களது காதல் குறித்து நடிகை விசித்ரா கேட்டு பதிலைப் பெற்றுள்ளார்.  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன்…

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான ரவீனா தாஹா மற்றும் மணி சந்திராவிடம் அவர்களது காதல் குறித்து நடிகை விசித்ரா கேட்டு பதிலைப் பெற்றுள்ளார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆட்ட விதிகளின்படி, நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலையை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

இதையும் படியுங்கள் : ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி!

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா மணி சந்திரா மற்றும் ரவீனாவிடம், நீங்கள் இருவரும் காதலர்கள் என்று கேட்க, அதற்கு ரவீனா எனக்கு புரியல நீங்க சொல்லுங்க மணி என்று சொல்கிறார். மணி விசித்ராவிடம், நாங்கள் இருவரும் நெருங்கிய நன்பர்கள். ஒன்றாக நிகழ்ச்சிக்கு செல்கிறோம். ஒரு புரிதல் இருக்கு என்று மணி கூறினார். நாங்க இருவரும் காதலர்கள் என்றும் எங்கேயும் சொன்னது இல்லை ரவீனாவும் சொன்னார்.

https://twitter.com/aadhik_vet09/status/1711981484423446820?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1711981484423446820%7Ctwgr%5E6af9512e7c29e5cfa093131f41ffa58bf84cca8c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Fbigg-boss-tamil%2Fbigg-boss-7-tamil-actress-vichithra-questioned-to-mani-chandra-and-raveena-video-viral-144545

ஆனால், நீங்க பேசியே வரவச்சுடுவீங்க என்று விசித்ராவிடம் மணி கூற, மணியை கன்னத்தில் அறைகிறார் ரவீனா. இவர்கள் பேசும் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பவா செல்லதுரை வெளியேறியதால், இந்த வாரம் Elimination கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய: https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.