#YOLO | #Kanguva திரைப்படத்தின் 2வது பாடல் – புதிய போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்…

#YOLO | #Kanguva Movie 2nd Song - Crew Announced With New Poster!

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26-ம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது. கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுவரை படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் கங்குவா தலைவனான பழங்குடி தன்மையுடைய கதாப்பாத்திரத்தின் போஸ்டர்கள் தான் வெளியானது. ஆனால் தற்பொழுது படக்குழு சூர்யாவின் புது தோற்றமுடைய ஃப்ரான்சிஸ் கதாப்பாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.