‘லக்கி மேன்’ திரைப்படத்தின் டிரைலரை இன்று ஆர்யா மற்றும் அருண் விஜய் வெளியிட்டனர். தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யோகிபாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனினின் வாழ்க்கையை பேசுகிறது. ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் டிரைலரை இன்று ஆர்யா மற்றும் அருண் விஜய் வெளியிட்டனர். தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.







