திருத்தணி பள்ளி பூட்டுகளில் மனித கழிவுகளை பூசியவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருத்தணி அருகே அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலத்தை பூசியும்
குடிநீர் தொட்டி சேதப்படுத்தியும் அடையாளம் தெரியாத நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வகுப்பறைகளை நேற்று புறக்கணித்து பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதை தொடர்ந்து காமெடி நடிகர் தாடி பாலாஜி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி வீடியோவில் பேசியதாவது:
என்னடா ஜென்மம் நீங்கெல்லாம்….உங்களுக்கு அறிவே இல்லையா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் நீங்கள் மனித கழிவை அனைத்து பூட்டுகளிலும் பூசியது நினைத்தால் அருவருக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது பல்வேறு வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/news7tamil/status/1692834923554730197?s=20







