நடிகர் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது.
இந்நிலையில் இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கின்றனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவன தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : #Mobile மூலம் மனைவிக்கு முத்தலாக் – குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.







