யானை திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய், யோகி பாபு
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் யானை திரைப்படத்தை ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய் மற்றும் யோகி பாபு ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்து, படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அருண் விஜய், படத்தைப் பார்த்த மக்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களுடன் படம் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்தக் கூட்டணி தொடரும் எனவும் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘படப்பிடிப்பு தளத்தில் விபத்து; நடிகர் விஷாலுக்குக் காயம்’
அப்போது, நடிகர் அஜித்துடன் படம் பண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தெரியவில்லை , அது கௌதம் சாருக்குதான் தெரியும், அப்படி நடந்தால் நன்றாக இருக்கும், விக்டர் கதாபாத்திரம் பற்றி கௌதம் சார் இடம் பேசி வருகிறோம், பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விக்டர் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம், மக்களும் அந்த கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பெரிய வெற்றிப் படமாக உள்ளது. இன்னும் சில நாள்களில் அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகும் எனக் கூறினார்.








