கொரோனாவின் லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை வூஹான் மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முதலாக சீனாவின் வூஹான் மாநகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவியது. இந்த வைரஸானது அங்கிருந்த இறைச்சிச் சந்தை மூலமாகவோ அல்லது எரும்புத்திண்ணிகள் மூலமாகவோ பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் அதை இதுவரை உறுதிபடுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வருட தொடக்கத்தில் சீனாவின் வூஹான் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், 11 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டுக்குள் முடங்கினர். அதன்பின் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகளை மின்னல் வேகத்தில் கட்டி சிறப்பு சிகிச்சையளியத்தது. அதன் காரணமாக கொரோனா பரவலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சுமார் 76 நாட்களுக்கு பின்னர் முழு ஊரடங்கை சீனா விளக்கிக்கொண்டது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முழு ஊரடங்கில் இருந்து விளக்களிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து மக்கள் தங்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதை கொண்டாடும் விதமாக கடந்த சனிக்கிழமை பூங்காக்கள் மற்றும் மதுபான பார்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.







