கிரீஸில் 2 கோடி ஆண்டுகள் பழமையான மரத்தின் புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லெஸ்போஸ் தீவில் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த மரம் கண்டறியப்பட்டது. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த மரம் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.