“வா வா என் தேவதையை…” ரன்வீர் சிங் – தீபிகா படுகோண் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது!

ரன்வீர் சிங் – தீபிகா படுகோண் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து…

ரன்வீர் சிங் – தீபிகா படுகோண் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திரையுலக சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகை தீபிகா படுகோனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் எடுத்த மெடர்னிட்டி போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.