புதுக்கோட்டை, செல்லுகுடியில் வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய்
உடைத்து வழிபாடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில்
மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில், ஆடி திருவிழா சிறப்பாக ஒவ்வொரு
ஆண்டு நடப்பது வழக்கம். ஆண்டுதோறும் செல்லுகுடி கிராம மக்கள் சார்பில்
இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆடிதிருவிழா கடந்த 15
தினங்களாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை சர்வ
அலங்காரத்தில், வீரலட்சுமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், 4 வீதிகளின் அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள்
தங்களது நேர்த்தி கடனாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்து.
வரிசையாக பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, கோயில் பூசாரி அவர்களின்
தலையில் தேங்காய்களை உடைத்தார். தொடர்ந்து, கோவில் பூசாரி
சாட்டையால் அடித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
கு. பாலமுருகன்







