தமீம் இக்பால் வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் அறிவித்து அதிர்ச்சியளித்தார். பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்குப் பிறகுத் தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில், தமீம் இக்பால் தொடர்ந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வரவிருக்கும் ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், நான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஒரு அணியின் வீரராக கவனம் செலுத்துவேன். காயம் ஒரு பிரச்சினை என்று நான் நம்புகிறேன். எனவே அதை மனதில் வைத்து பதவி விலகுவதே சிறந்த முடிவாகும் என கூறினார்.







