உலகின் அதிக விலைக்கு விற்பனையான வீடியோ கேம் என்கிற பெருமையை நிண்டெண்டோவின் சூப்பர் மேரியோ 64 என்கிற கேம் பெற்றுள்ளது.
90களில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலானோருக்கு இந்த கேம் பரிட்சயமாகியிருக்கும். ஒவ்வொரு கட்டமாக வரும் சவால்களைக் கடந்து இறுதியில் பயங்கர டிராகனிடமிருந்து இளவரசியை மீட்கும் கதையையே கேமாக செட் செய்திருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்களுக்கு அலாதி பிரியமான இந்த வீடியோ கேம் தற்போது 1.56 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.11.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெறும் டல்லாஸில் பாரம்பரிய ஏலத்தில் சூப்பர் மேரியோ கேம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நிண்டெண்டோ நிறுவனத்தின் லெஜன்ட் ‘ஆஃப் ஜெல்டா’ எனும் கேம் 870,000 டாலருக்கு விலைக்கு விற்பனையாகியிருந்தது. இந்திய மதிப்பில் ரூ.6.49 கோடியாகும். இதனையடுத்து ‘சூப்பர் மேரியோ ப்ரோஸ்’ 660,000 டாலருக்கு விற்பனையாகியிருந்தது. இந்திய மதிப்பில் ரூ.4.9 கோடியாகும்.
இந்த நிலையில் தற்போது சூப்பர் மேரியோ 64 அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. விற்பனையான இந்த பிரதியானது பிரிக்கப்படாமல் இருந்த பிரதி என்பது குறிப்பிடத்தக்கது.