முக்கியச் செய்திகள் விளையாட்டு

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், செப்டம்பர் – 26 முதல் அக்டோபர் – 2 வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெறும் என தெரிவித்தார். அதற்கான அனுமதி இன்று கிடைத்துள்ளது என தெரிவித்த அவர், விளையாட்டு அரங்கம் போட்டிக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டார். அப்பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘கேன்ஸ் படவிழாவில் வெளியாகுகிறது ‘வேட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்’

இந்நிலையில், ஜூலை – 28 முதல் அக்டோபர் – 10 வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புடன் இன்று கையெழுத்தாகியுள்ளது. மேலும், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட உள்ள அணியின் 12 பேர் கொண்ட குழு மற்றும் பயிற்சியாளர்கள் குழு உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேசமயம், சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான பேச்சுவார்த்தையும் இன்று நடைபெற்று வருகிறது.

 • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மகளிர் அணி வீரர்கள்:
  கொனெரு ஹம்பி
  பாக்டி குல்கர்னி
  தனியா சச்தேத்
  வைஷாலி
  சௌமியா சாமிநாதன்
  வந்திகா அகர்வால்
 • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட உள்ள இந்திய ஆடவர் அணி வீரர்கள்:
  அர்ஜுன் ஏரிகேசி
  கிருஷ்ணன் ஆசிகரன்
  குகேஷ்
  நிஹால் சரின்
  நாராயணன்
  விதித் குஜராத்தி
 • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின், இந்திய அணி பயிற்சியாளர்கள்:
  போரிஸ் கெல்பன்ட்
  அபிஜித் குந்தே
  ஶ்ரீநாத் நாராயணன்
  ஷ்யாம் சுந்தர்
  ஸ்வயம்ஸ் மிஷ்ரா
  வைபவ் சுரி
  சங்கல்ப் குப்தா
Advertisement:
SHARE

Related posts

விசாரணை வளையத்தில் சகோதரர்கள்: சஜீவனுக்கு செக்?

Halley Karthik

மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

Ezhilarasan

கார் டயர் வெடித்து விபத்து: மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி

Halley Karthik