நடிகர் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிராகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பராசக்தி படத்திலிருந்து இதுவரை வெளியான ’அடி அலையே’, ’ரத்னமாலா’, ’நமக்கான காலம்’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 9ல் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜன நாயகன்’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பராசக்தி திரைப்படத்திலிருந்து , ‘வேர்ல்ட் ஆப் பராசக்தி’ என்ற தலைப்பில் ஒரு புது வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.







