முக்கியச் செய்திகள் Health

யாருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும்?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதி, உலக கல்லீரல் தினம் மற்றும் கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த நாளான இன்று அனுசரிக்கப்படுகிறது.

யாருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும்? கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள் என்ன? என்பது இயல்பாக மக்கள் மனதில் எழும் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர், கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைந்து வீக்கத்தை ஏற்படும் எனவும், இதனால் கல்லீரல் சுருங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கும், மோசமான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கும் இந்த கல்லீரலில் கொழுப்பு சேரும் எனவும், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் கல்லீரல் செயல் இழக்கும் தன்மைக்கு செல்லும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றானர்.

அண்மைச் செய்தி: ‘பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம்’

அதேபோல, சிலருக்கு கல்லீரல் புற்றுநோய் வரக்கூடும் எனவும் எச்சரிக்கும் மருத்துவர்கள் ஹெபடைடிஸ் B, ஹெபடைடிஸ் C வைரஸ் தொற்று காரணமாகவும் கல்லீரல் கடுமையாக பாதிக்க கூடும் என தெரிவிக்கின்றனர். இதனால், வருடம் ஒருமுறையாவது ரத்த பரிசோதனை மற்றும் கல்லீரலை பரிசோதனை செய்துவதன் மூலம் கல்லீரலை பாதுகாக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

+2 மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது

Arivazhagan CM

‘தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என். ரவி

Arivazhagan CM

எந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்

Ezhilarasan