உலக கோப்பை கால்பந்து; நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்திய துனிசியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை துனிசியா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்ற வருகிறது. உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில்…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை துனிசியா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்ற வருகிறது. உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியுடன் துனிசியா மோதியது. ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் பிரான்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் வெளியே உட்கார வைக்கப்பட்டனர். இது ஆப்பிரிக்க தேசமான துனிசியாவுக்கு சாதகமாக அமைந்தது.

தொடக்கம் முதலே முழு உத்வேகத்துடன் வரிந்து கட்டிய துனிசியா அணியினர் 7-வது நிமிடத்தில் கோல் அடித்தனர். ஆனால் அது ‘ஆப்-சைடு’ என்று மறுக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் போராடிய துனிசியா 58-வது நிமிடத்தில் பிரான்சின் தற்காப்பு வளையத்தை உடைத்தது. 2 முன்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி துனிசியாவின் வஹ்பி ஹாஸ்ரி முதல் கோல் அடித்தார்.

பிரான்ஸ் அணி கடைசி வரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் துனிசியா அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பை கால்பந்தில் ஐரோப்பிய அணிக்கு எதிராக துனிசியா பெற்ற முதல் வெற்றி இது தான். அத்துடன் உலகக் கோப்பை தொடரில் கடைசி 9 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் இருந்த நடப்பு சாம்பியன் பிரான்சின் வீறுநடை முடிவுக்கு வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.