உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2 முறை சாம்பியன்களான அர்ஜென்டினா 6-ஆவது முறையாகவும், பிரான்ஸ் 4-ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த முறை கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியில் வென்று உலகக் கோப்பையை தன்வசமாக்கும் அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக திகழும் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி, இந்த கத்தார் உலகக் கோப்பை தொடருடன் தனது கால்பந்து பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதால், அர்ஜென்டினா அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரம் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், இந்த தொடரிலும் வலிமையாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளதால், அர்ஜென்டினா அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.