கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் கிட்டதட்ட 6000 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்தார் நாட்டில் நடை பெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் கிட்டதட்ட 6000 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2010இல் பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான உரிமையைப் பெற்ற கத்தார், அன்று முதல் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது. இதற்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியது கத்தார். இந்த பணிகளைச் செய்து முடிக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தியது கத்தார். குறிப்பாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்திய கத்தார் அரசு அவர்களை நடத்திய விதத்திற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. போட்டிக்கான பணிகள் 2010ல் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ‘தி கார்டியன்’ நாளிதழ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கத்தார் நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தில் பணியாளர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் கடுமையாக வேலை கொடுக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மரணிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
இப்படி கடுமையான வேலை பலு காரணமாக இறந்த தொழிலாளர்களின் இறப்பை ‘இயற்கை மரணம்’ என்று செய்யப்பட்டதாகவும், இந்தக் இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.
இதன் காரணமாகவே கத்தார் நாட்டின் மீது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக உலகக் கோப்பை போட்டிக்காக கத்தாரைத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் பிஃபாஃ தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார்.
இருப்பினும், எவ்வவளவோவோ எதிர்ப்புகளையும் தாண்டி கத்தாரில் நேற்று கோலாகலமாகக் கலை நிகழ்ச்சிகளுடன் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6000 பேர் உயிரிழந்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.







