முக்கியச் செய்திகள் விளையாட்டு

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து: ஈரானை பந்தாடியது இங்கிலாந்து

இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 2-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதியது. துவக்கத்திலிருந்தே முன்னாள் சேம்பியனான இங்கிலாந்து ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது.

இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் முயன்றனர். போட்டியை டிரா செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து ஈரான் அணி போராடிக்கொண்டிருந்த நிலையில் 65-வது நிமிடத்தில் அந்த அணியின் மெஹ்தி கோல் அடித்தார். போட்டியின் 89வது நிமிடத்தில் ஜேக் கிரீலிஸ் கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை வகுத்தது. அதை தொடர்ந்து ஈரான் வீரர் மெஹ்தி ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதும் போட்டி இரவு 9.30 மணிக்கு துவங்கியது. தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறதே தவிர இதுவரை கோப்பையை வென்றதில்லை. தனது கடைசி 15 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்தல் கடைசி நேரத்தில் சாடியோ மனே விலகியது செனகலுக்கு பெரும் சறுக்கலாகும். இவர் தான் செனகல் அணிக்காக அதிகமாக 34 கோல்கள் அடித்தவர் ஆவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் – மதுரை மேயர் அறிவுறுத்தல்

EZHILARASAN D

தேமுதிக தனித்து போட்டி; விஜயகாந்த் அறிவிப்பு

Arivazhagan Chinnasamy