முக்கியச் செய்திகள் தமிழகம்

உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து தலைநகரில் அமைய வேண்டும்- முதலமைச்சர்

உலகத்தரம் வாயந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) 2010 இல் உருவாக்கப்பட்டது. முதலமைச்சரை தலைவராகக் கொண்ட CUMTAவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமம், மாநகர போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பலவகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 5904 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய திட்டம், NCMC எனப்படும் ஒரே பயண அட்டையில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும்.
பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ, அப்போது தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும்.

எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். இதில் நான் குறிப்பாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்: Live Updates

Jayasheeba

சுயசார்பு இந்தியாவை நோக்கி நடைபோடுகிறோம் – பிரதமர் மோடி உரை

EZHILARASAN D

ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவம்- விசாரணை கைதி மரணத்தில் திடுக்கிடும் தகவல்

EZHILARASAN D