உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிசுற்று நடைபெற்றது.
இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் 12 போட்டியாளர்களில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட மூவர் இந்தியர்கள். ரசிர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி 2வது சுற்றில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கதை கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடமும், டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தனர். தங்கம் வென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.







