எலான் மஸ்கிடம் வேலை செய்வது… ரொம்ப கஷ்டம்.. – #Tesla துணைத் தலைவர் திடீர் ராஜினாமா!

எலான் மஸ்கிடம் வேலை செய்வது மிகவும் எனக் கூறி டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக…

எலான் மஸ்கிடம் வேலை செய்வது மிகவும் எனக் கூறி டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. பணிநீக்கம், பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல  நடவடிக்கைகளை டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் சமீப காலமாக எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் போட்காஸ்ட் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.