மகளிர் #T20WorldCup | நிகர் சுல்தானா தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கான வங்கதேச அணியினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Women's #T20WorldCup - Bangladesh squad announced by Nigar Sultana!

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கான வங்கதேச அணியினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டார். இதேபோல நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இதேபோல அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் அக்டோபர் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும் அக்.13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வங்கதேச அணியின் கேப்டான நிகர் சுல்தானா அறிவிக்கப்பட்டுள்ளார். நிகர் சுல்தானா தலைமையிலான 15பேர் கொண்ட பட்டியலை அந்நாட்டு அணி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.