டெல்லி கேபிடல்ஸ், UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், உபி
வாரியர்ஸ் அணிகள் மோதின. டி ஒய் பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
உபி அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லி அணியின் கேப்டன் மெக் லென்னிங் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 70 ரன்கள் குவித்து ராஜேஸ்வரி கெய்க்வாட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் அணிக்கு வலு சேர்த்த ஜெமிமா ரோட்ரிகஸ் 22 பந்துகளில் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 20 பந்துகளில் 44 ரன்களும் குவித்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்தனர்.
212 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய உபி அணியானது, துவக்க
ஆட்டக்காரர்ககளை பவர்பிளே ஓவர்களுக்குள் இழந்தது. அதன் பின் களமிறங்கிய தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருப்பினும் இருபது ஓவர்கள் முடிவில் உபி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறந்த வீராங்கனைக்கான விருதினை டெல்லி அணியில் 44 ரன்கள் விளாசிய ஜெஸ் ஜோனாசன் பெற்றார்.
இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்கிறது. இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. மாலை 7:30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில்
போட்டி நடைபெறவுள்ளது.