சேலை அணிந்தும் பெண்களால் கால் பந்து விளையாடும் முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலை அணிந்த படி அவர்கள் பந்தை சுழற்றி அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலானோர் நாம் வசிக்கும் இடத்திற்கும்,வேலை பார்க்கும் சூழலுக்கும் ஏற்றார் போல உடைகளை தேர்வு செய்து அணிவது வழக்கம் . சாதாரணமாக வீட்டில் அணிகின்ற ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதில்லை. அதிலும் சுடிதார், பேண்ட் ஷர்ட் அணிவதில் இருக்கும் சவுகரியம் சேலை அணிவதில் இருக்காது என்பது பலரின் வழக்கமாக எண்ணமாக உளள்து.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், இவை எல்லாவற்றையும் பொய் என்று நிரூபிக்கும் விதமாக இணையதளத்தில் பெண்கள் சேலை அணிந்து கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் மகளிருக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது. அதுவும் பெண்கள் சேலை அணிந்து கொண்டு பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டுள்ளது. குவாலியரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் சுய உதவி குழு பெண்களை இணைத்து கடந்த ஆண்டு கால்பந்து போட்டி நடத்தியது. அப்போது 4 அணிகள் கலந்து கொண்டனர்.
2-வது முறையாக இந்த ஆண்டும் ‘கோல் இன் சேரி’ என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பெண்கள் அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்ற அணைத்து பெண்களும் போட்டியின் போது விளையாட்டு ஜெர்சிக்கு பதிலாக சேலை அணிந்திருந்தனர். கடந்த மார்ச் 25 மற்றும் மார்ச் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் தங்கள் அணியின் சீருடைக்கு ஏற்பட்ட ஆரஞ்சு, பச்சை நிற சேலைகளை அணிந்து கொண்டு மகளிர் களத்தில் இறங்கினர். இந்த கால்பந்து போட்டியில் 20 வயது முதல் 72 வயது வரை உள்ள இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 96 பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சேலை அணிந்து இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய பெண்கள், நமது பாரம்பரிய உடையை அணிந்து விளையாடும் போது எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. சேலை அணிந்து கால் பந்துமட்டுமல்ல எந்த விளையாட்டையும் விளையாடலாம் என்பதை நிரூபிக்கும் விதாமாகவே இதை அணிந்து விளையாடியுள்ளோம் என்று தெரிவித்தனர். மேலும் சேலை அணிந்த படி பெண்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்திரிகையாளர் பிரபு படேரியா (@PrabhuPateria), தற்போது குவாலியர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் கிஷோர் கன்யால் ஆகியோர் பெண் வீரர்கள் கடுமையான ஆட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை தங்களது ட்வீட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வைகளை பார்த்து ரசித்துள்ளனர்.
Goal in Saree
ग्वालियर में महिलाओं ने साड़ी वेशभूषा में फुटबॉल खेली। आयोजन को लेकर उत्साह का आलम यह था कि IAS @kishorekanyal_ ने मैच की कमेंट्री की।
जॉली एलएलबी का साड़ी इलेवन v/s बुर्का इलेवन याद आ रहा है ना! pic.twitter.com/73aTrsibow— Prabhu Pateria🇮🇳 (@PrabhuPateria) March 26, 2023
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், சேலை அணிவோம், கட்டுகோப்பாக காட்சியளிப்போம் என்ற சிந்தனையின் அடிப்படையில் நிகழ்ச்சியாளர்கள் இந்த கால்பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தியிருக்கின்றனர். அருகில் இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் ஆர்வமுடன் வந்து போட்டியில் விளையாடியுள்ளனர். போட்டியின் அடுத்த நிகழ்விற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. இருந்தும் அடுத்த போட்டியில் நுழைவதற்காக டாடியா மாவட்டம் உட்பட மத்திய பிரதேசத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏரளமான பெண்கள் எங்களை அணுகி வருகின்றனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இன்னும் அதிக அணிகள் பங்கேற்கும் என்று நம்புவதாக சமூக ஆர்வலர் அஞ்சலி குப்தா பத்ரா கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா